காதுக்குள் வைத்து மீண்டும் கேட்டேன்.
இரவு கைக்குள் தூங்கிய பூச்சி
முட்டி முனகியது
"நிறமில்லாக் கனவில்
நிறமில்லா வண்ணத்துப்பூச்சிகள்
மலர்களிலும் நிறமில்லை
அங்கே எல்லாமே பறக்கின்றன
பூச்சிகளும், பூக்களும் கூட
ஒற்றை மரத்தில்
அவை தேன்களை ஒன்றுசேர்க்கின்றன
மரம் பெரிதா
தேன்கூடு பெரிதா
என்னும் அளவு
அங்கே மரமும், தேனும்
சமமாய் இருக்கின்றன"
Wednesday, July 06, 2005
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment