Tuesday, March 29, 2005

தையலின் தையல்

கண்களைத்திறந்தாலும் நீ!
கண்களை மூடினாலும் நீ!
நினைவுச்சிதறலினால்
நேற்று காபியில் உப்பு!
இன்று சாம்பாரில் சர்க்கரை!
என் புத்திக்குள் நின்று
ஆடுகிறாய் சடுகுடு!
மன பரப்புகளை
ஆக்ரமிக்கிறாய் மா வீரனாக!
சொல்லவும் முடியாமல்
விழுங்கவும் முடியாமல்
தொண்டைக்குள் தைத்த
மீன் முள் செருகலாய்..
தைத்துக்கொண்டது
இதயம் மட்டுமல்ல
குரல் வளையும் தான்!

No comments: