என்ன என்ன மாயம் இது?
என்னில் நானே கண்டுகொண்டேன்
அனுமதியின்றி வெளியேறியது
எந்தன் நெஞ்சம்
அனிச்சையாய் உள்ளே வந்தது
உந்தன் நெஞ்சம்
கண்கள் பேசியது
இதயம் சிரித்தது
காட்சிகள் இல்லாமல்
கண்கள் பார்த்தன
ஆட்கள் இல்லாமல்
உதடுகள் பேசின
ஒன்றும் இல்லாமல்
கைகள் புரிந்தன
இலக்கே இல்லாமல்
கால்கள் நடந்தன
"அதனதன் வேலையை
அது அது செய்யாமல்
இது என்ன?" என்று
நான் அதட்ட
"நீ மட்டும் என்ன?" என்று
கேலியாய் சிரித்தன - நீ
செல்லும் திக்கில் எல்லாம்
சொல்லாமல் நடந்தேன்
விலகிய போது அலுத்தேன்
பேச விட்டு ரசித்தேன்
வினா கேட்ட போது
விடைக்காக தவித்தேன்
பிடித்ததை பிடிக்காது என்றும்
பிடிக்காததை பிடித்தது என்றும்
மாற்றி மாற்றி உரைத்தேன்
தொடர்ந்து தொடர்ந்து உன்
நிழலைப் பிடித்து
மனதைப் படித்தேன்
பிறகு தான் தெரிந்தது
அதில் நான் இல்லையென.
Sunday, March 20, 2005
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment