Saturday, March 26, 2005

நிலவே! நிலவே!

நீ ஏன் கலங்குகிறாய்?
கலைந்து ஓடும்
மேகத்துக்காக ஏன்
கண்ணீர் வடிக்கிறாய்?

வானம் தான் உன்
வைப்பறை என்றால்
அது ஒன்றும்
சிறை இல்லையே!

நாளும் தாங்கும்
வானத்திற்கு நன்றி சொல்லிடு!
மறைத்தற்காக மேகத்திற்கும்
நன்றி சொல்லிடு!

இருளும் கொஞ்சம்
இருக்கட்டுமே உலகுக்கு!

களங்கம் உனக்கு
திருஷ்டிப் பொட்டு!
கவலை அதற்கேன்
வருத்தப் பட்டு?

தண்ணொளி எங்கும்
வீசிக்கிட்டு!
தவழ்வாய் பூமியை
சுற்றிக்கிட்டு!

No comments: