பத்து திங்கள் பார்த்திருந்து
பாங்காய் வந்த பசுங்கிளியே!
சிரிக்கும் பொன் பூவோ..
சிவந்த குளிர் தீயோ...
எங்கள் சிங்காரச் சிட்டே!
ஆழியில் ஊறிய முத்தே!
நான் தானடி உனது அத்தே!
கொத்து கொத்தாய் ஆசை வச்சேன்
உன்னை நானும் காண்பதெப்போ?
முத்து முத்தாய் சொல் தொடுத்து
முனைப்பாய் நானும் பாட்டெடுப்பேன்
தெள்ளு தமிழ் சொல்லெடுத்து
என்னை நீயும் விளிப்பதெப்போ?
உன்னைப்பெற்றெடுத்த சொந்தங்களுக்கோ
பத்து திங்கள் பரவசம்...
பார்க்காத இச்சொந்தங்களுக்கோ
பார்க்கும் வரை பரவசம்..
தத்தி தத்தி நடந்து வந்து
அத்தை அத்தை என்னும்
அந்த நாளுக்காக காத்திருக்கேன்..
அஞ்சுகமே ஓடி வா...
Sunday, March 27, 2005
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment