Saturday, March 26, 2005

வித்தியாச ஏகலைவன்

விழிகளால் பேசும்
வித்தையை கற்றுத்தந்தேன் - அதற்காக
அண்டத்தை அளக்கும் உன்
அகண்ட விழிகள் வேண்டாம்

மனிதம் வளர்க்க
மணி நூறு பேசினோம் - அதற்காக
மானுடத்தை சுவாசிக்கும் உன்
மல்யுத்த மார்புகளும் வேண்டாம்

பூ நோகாமல்
பூப் பறிக்க கற்றுத்தந்தேன் - அதற்காக
பூவொன்றை ஏந்தி வரும் உன்
கைச்செண்டும் வேண்டாம்

ஆனால்

என்னை மட்டும் தாங்கும்
உன் நெஞ்சத்தை மட்டும்
முழுதாய் தந்துவிடு! - ஏனென்றால்

நேசிக்கக்கற்றுத் தந்துவிட்டு
நெஞ்சத்தைக் கேட்கும்
வித்தியாச ஏகலைவன் நான்!

No comments: