Tuesday, March 29, 2005

நட்பே!

துணை கிடைத்ததும்
தனை மறந்தது
ஒரு நட்பு!

துணை கிடைக்காததால்
நீ என்றது
இன்னொரு நட்பு!

துக்கத்தை மறைத்தது
ஒரு நட்பு!
நான் துக்கப்படுவேன் என்று!

பொய் சந்தோசம் காட்டியது
நான் துக்கப்படக்கூடாது என்று
இன்னொரு நட்பு!

நட்பே!
உண்மையை உண்மையாக
ஏற்றுக்கொள்ளத்தான் நீ!

துக்கத்தை ரெண்டாக்கி
இன்பத்தை ரெட்டிப்பாக்காவிட்டால்
பிறகு நான் எதற்கு?

தோற்றாலும் ஜெயித்தாலும்
தோள் கொடுக்கத்தான் நான்!

மறுக்கவும் மறைக்கவும்
இதில் என்ன இருக்கிறது?

No comments: