Tuesday, March 29, 2005

பட்டாம்பூச்சி

கண்ணீர் வடிந்த
ஒரு ராத்திரியின்
வெளிச்சத்தில்

கண்கள் சிவந்து
நாளை என்ற
நம்பிக்கையை இழந்து
உயிரைத் துறந்து
யுத்தத்திற்கு
புறப்பட்ட தருணத்தில்

இன்றைய நிமிடத்தை
முழுமையாய்
அனுபவிக்கும்பொருட்டு
நேற்றைய பொழுதுகள்
தொலைந்தே போயிருக்கும்!

ஆனாலும் பாசப்பூக்கள்
ஒட்டிக்கொள்ளும் போது
நெஞ்சப்பட்டாம்பூச்சி
சிறகடிக்காமலில்லை!

No comments: