எந்தன் வீணையே!
வீணாய்ப் போனதேனோ?
நகரும் போதை மாயைக்குள்
உன் தந்திகள் புதைந்துப் போயினவோ?
நீ சுரத்தையின்றி சுருண்டால்
நற்சுரங்கள் அழாதோ?
காய்ச்சலுக்காக மருந்துண்ணலாம்.
மருந்தே உணவானால்...?
அது உன்னை உண்டுவிடாதா?
வாழ்க்கையில் களிப்புகள் இருக்கலாம்.
களிப்பே வாழ்க்கையானால்
எதிர்காலம் என்னாவது? நீ
மிச்சமின்றி துய்த்த எச்சத்தில்
மிஞ்சிக்குப் பூசைகளா?
நாளைய அரை நாள்
இன்றைய ஒரு நாளுக்குச் சமமாம்.
களித்தது போதும்.
இன்றே எழுந்திரு!
உன்னிடமுள்ள சுரமே
சுரத்தை ஓட்டும் மருந்து.
நீ மீட்ட மீட்ட
தூசுகள் தானே ஓடிவிடும்.
உன் சுரம் நான் கேட்கிறேன்.
நல்லதோர் வீணையே!
புழுதியில் கிடக்காதே!
Thursday, September 01, 2005
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment