"மிஸ்டர் வின்ஸ் எப்படி இருக்கீங்க? என்னை தெரிகிறதா? "
"நீங்க…. நீ …. ரமேஷ் தானே…நல்லா இருக்கியாடா…. இங்கே எப்படி?"
"போன மாதம் தான் மாற்றல் வாங்கிக்கொண்டு இந்த ஊருக்கு வந்தேன்..வீட்டில் எல்லோரும் நலமா…? "
"எல்லாரும் நல்லா இருக்காங்க… இப்போ எங்கே தங்கி இருக்கே?"
"சொல்றேன். வா வீட்டுக்கு போலாம். "
வீட்டில் இருவரும் தேனீர் அருந்தியபடி…"ஏன்டா ரமேஷ், சொந்த வீட்டையும் ஊரையும் விட்டுட்டு ஏன் வந்தே? "
"என் கம்பெனி ல பாஸ் மாறிட்டஙடா…. அவன் இம்சை தாங்க முடியல. சீனியர், ஜூனியர் எல்லரையும் நீ, வா, போங்ஙறான். அவன் வீட்டு வேலைக்காரன் மாதிரி நடத்தறான். எனக்கு சரி படும்னு தோணல… அதான் இந்த ப்ராஞ்ச் கு கேட்டுட்டு வந்திட்டேன்…"
"அப்பா…அப்பா… இந்த பொம்மையை புடி… நீயும் வாப்பா விளையாடலாம். "
" நான் பேசிட்டு இருக்கேன்ல… போய் தம்பியோட விளையாடு."
"முடியாது…நீயும் வா… அங்கிள் நீங்களும் வாங்க…"
"சொன்னா கேட்க மாட்டே… தொந்திரவு பண்ணாதே! போ!" தள்ளி விட்டான்.
“ம்..ம்….ம்… “ குழந்தை அழ ஆரம்பித்தது.
வின்ஸ் “அழாதேம்மா…! அப்பா தானே திட்டினார்”
"நான் அதுக்கொன்னும் அழல…அப்பா என்ன போ...னு சொல்லிட்டாரு… போ... மா....னு அன்பா சொல்லிருக்கலாம்ல! "
ரமேஷின் பின் மண்டையில் சொடேர் என அடித்தாற்போல இருந்தது.
குழந்தையை அள்ளித் தூக்கியபடி "சரிம்மா, இனி அப்பா கோபமா பேசமா ட்டேன்"
எதையும் எதிர்பார்க்காதது போல் குழந்தை கையிலிருந்து நழுவி விளையாட ஓடியது.
Saturday, July 11, 2009
Tuesday, June 02, 2009
நிறம் மாறிய நெஞ்சம்
நிறம் மாறிய நெஞ்சம்
************************
"என்ன மச்சான்.... இது எத்தனாவது?" சுரேஷ்.
முகத்தை சுழித்தவாறே நவீன் "11ன்னு நினைக்கிறேன் மாம்ஸ். வரியா.... சாயங்காலம் போலாமா...?"
"அடையார்தானே! கிளம்பிட்டு போன் பண்ணு மச்சான்"
"இந்த முறையாவது பொண்ணு நான் நினச்சபடி இருக்கணும்னு வழிவிடு விநாயகர்கிட்டே வேண்டிட்டு வா மாம்ஸ்"
"கவலைப்படாதடா.... எல்லாம் நீ நினச்சபடியே அமையும்"
...........
அன்றிரவு, ஸ்கூட்டரில் இருவரும் திரும்பி வரும் போது..."ஏண்டா... பொண்ண பிடிக்கலைன்னு சொன்னே..? நல்ல குடும்பம். ஒரே பொண்ணு. பார்க்க லட்சணமா அடக்கமா இருக்கு. கை நிறைய சம்பளம். வேற என்னடா வேணும்?"
"இல்ல மாம்ஸ். நானும் சுமாரான நிறம்; பொண்ணும் அப்படியே இருந்தா குழந்தையும் அதே நிறமாத்தான் பொறக்கும். சுண்டினா சிவக்கிற குங்குமப்பூ மாதிரி... இருக்கணும் மாம்ஸ்.. ப்ச்.. போட்டோவப் பார்த்து ஏமாந்துட்டேன்!"
"அடப்பாவி! நான் உங்க அக்காவ கட்டிக்கிடலயா...? உன் மருமவன் சிவப்பா பிறக்கலையா..? என்னடா நீ!"
"நீ அந்தக்காலம். எங்க அக்காவ பிடிச்சிப்போய் கட்டிக்கிட்டே; நான் என் பிரண்ட்ஸ்கிட்டே நாளைக்கு இதுதான் என் ஒய்ஃப்னு காட்டிக்கும்போது ஒரு தமன்னா, ஷ்ரேயா மாதிரி இல்லாட்டாலும் என் ரேஞ்சுக்காவது இருக்கணுமில்ல...! எஞ்சீனியர் மாப்பிள்ளைன்னா சும்மாவா...?"
...........
"எதுக்கு மாப்ள அவசரமா ஹாஸ்பிடல் வர சொன்னே?"
"விரல் நுனிகளில் லேசான அரிப்பு இருக்கு மாம்ஸ்... நிறம் பாரு மாறி இருக்கு. அதான் டாக்டர்கிட்டே காட்டிட்டு போலாம்னு... டோக்கன் நம்பர்.5. அடுத்து நாமதான்"
............
"என்னா டாக்டர்.. ஏன் என் மாப்பிள்ளைக்கு இப்படி இருக்கு?" சுரேஷ்.
"பயப்படுற மாதிரி ஒண்ணும் இல்ல மிஸ்டர். நவீன். இது சோரியாஸிஸில் ஒரு வகை. பரம்பரையா இது வரலாம். அதாவது உங்க தாத்தா, பாட்டிக்கு இது போல் இருந்ததுன்னா உங்களுக்கு வரலாம். உங்களுக்கு இருக்கிறதால உங்க குழந்தைக்கு வர வாய்ப்பிருக்கு, இதனால மற்றவங்களுக்கு எந்த பாதிப்பும் இல்ல. அதனால பயப்பட வேண்டாம். பட், உங்களுக்கு ஒயிட் ஸ்கின் அப்படியே ஸ்ப்ரெட் ஆகும். நிறம் மாறும். அந்த இடத்தில் ஒயிட் ஹேர்ஸும் வரலாம். நான் செக் பண்ணிட்டேன்; உங்க தலையில அப்படி எதுவும் ஒயிட் ஹேர்ஸ் இல்லை. நம்ம தோலில் இருக்கிற மெலானின் குறைவுதான் இதற்கு காரணம். கருப்பா இருக்கிறவங்களுக்கு 'மெலானின்' அளவு கூடுதலா இருக்கும். கடவுள் அதனாலதான் இயற்கையாவே நம்மள அப்படி படைச்சிருக்கார். ஃபேஸ் கிரீம், வேற சோப் எதுவும் போடாதீங்க. டெய்லி இந்த லோஷனை தடவிட்டு சன்பாத் எடுங்க. திருப்பி நெக்ஸ்ட் வீக் வந்து பாருங்க."
...........
"என்ன மாப்ள... ஸ்கின் சரியாகிடுச்சு போல. இப்ப சந்தோசம்தானே!"
"ஆமாம் மாம்ஸ். நாளைக்கு நாம 'நிச்சயம்' பண்ண போலாமா?"
"அட! பொண்ணு யாரு?"
"அதே பொண்ணுதான். போன மாசம் பார்த்தோமே!"
"அப்பாடா..... எனக்கு நிம்மதிடா. இனி உன் கூட வீடு வீடா அலைய வேண்டியதில்ல... இப்பவே உங்க அக்காகிட்ட சொல்லிடுறேன்"
--------------------------------------------------------------------

Wednesday, April 04, 2007
எளிய முறையில் ஜாவா - பகுதி 4
ஜாவா ஆணைத்தொடர் அமைப்பு
சென்ற பகுதியில் ஜாவாவின் மொழி கட்டமைப்பினைப்பற்றியும், கீ வோர்ட் (பதிக்கப்பட்ட வார்த்தைகள்) பற்றியும் பார்த்தோம். இப்பகுதியில் சாதாரண ஒரு ஆணைத்தொடர் (program) அமைப்பினை எடுத்துக்காட்டோடு எப்படி இயக்குவது என்று பார்ப்போம்.
< > என்ற அடைப்புக்குறிக்குள் (angle bracket) கொடுக்கப்பட்டவை பயனாளர் தேர்வு செய்யும் பெயர்கள் (user variables) ஆகும்.
class
{
:
;
;
public static void main(String args[])
{
System.out.println(" ");
}
}
--------------------------
(எடுத்துக்காட்டு)
class sample()
{
public static void main(String args[])
{
System.out.println("You are welcome to java programming");
}
}
----------------
இயக்க:
கமன்ட் ப்ராம்ப்டில் (start -> run -> type cmd or command -> enter)
c:\javac sample.java
c:\java sample
கிடைக்கும் பதில்:
output:-
You are welcome to java programming
(javac sample.java என்பது கம்ப்பைலருக்கு தரப்படும் கோப்பின் பெயராகும்.
java sample என்பது இன்டர்ப்ரட்டருக்கு தரப்படும் க்ளாசின் பெயராகும்)
பின்குறிப்பு:-
ஜாவாவை இயக்க
1. ஜாவா விர்ச்சுவல் மெசின் நிறுவப்பட்டிருக்கவேண்டும் (மேலும் விவரத்திற்கு சென்ற பகுதியைக்காண்க)
2. ஜாவா இயங்கு பாதையும் நிறுவப்பட்டிருக்கவேண்டும்.
விண்டோஸ் இயங்கு தளத்தில் இருப்பவர்கள்
my computer -> properties -> environmental variables -> java home -> jdk\bin
-ல் ஜாவா இயங்கு பாதையை நிறுவி விட்டால் எந்த டிரைவிலிருந்தும் உங்களது தரவினை இயக்க முடியும்.
சென்ற பகுதியில் ஜாவாவின் மொழி கட்டமைப்பினைப்பற்றியும், கீ வோர்ட் (பதிக்கப்பட்ட வார்த்தைகள்) பற்றியும் பார்த்தோம். இப்பகுதியில் சாதாரண ஒரு ஆணைத்தொடர் (program) அமைப்பினை எடுத்துக்காட்டோடு எப்படி இயக்குவது என்று பார்ப்போம்.
< > என்ற அடைப்புக்குறிக்குள் (angle bracket) கொடுக்கப்பட்டவை பயனாளர் தேர்வு செய்யும் பெயர்கள் (user variables) ஆகும்.
{
public static void main(String args[])
{
System.out.println("
}
}
--------------------------
(எடுத்துக்காட்டு)
class sample()
{
public static void main(String args[])
{
System.out.println("You are welcome to java programming");
}
}
----------------
இயக்க:
கமன்ட் ப்ராம்ப்டில் (start -> run -> type cmd or command -> enter)
c:\javac sample.java
c:\java sample
கிடைக்கும் பதில்:
output:-
You are welcome to java programming
(javac sample.java என்பது கம்ப்பைலருக்கு தரப்படும் கோப்பின் பெயராகும்.
java sample என்பது இன்டர்ப்ரட்டருக்கு தரப்படும் க்ளாசின் பெயராகும்)
பின்குறிப்பு:-
ஜாவாவை இயக்க
1. ஜாவா விர்ச்சுவல் மெசின் நிறுவப்பட்டிருக்கவேண்டும் (மேலும் விவரத்திற்கு சென்ற பகுதியைக்காண்க)
2. ஜாவா இயங்கு பாதையும் நிறுவப்பட்டிருக்கவேண்டும்.
விண்டோஸ் இயங்கு தளத்தில் இருப்பவர்கள்
my computer -> properties -> environmental variables -> java home -> jdk
-ல் ஜாவா இயங்கு பாதையை நிறுவி விட்டால் எந்த டிரைவிலிருந்தும் உங்களது தரவினை இயக்க முடியும்.
Thursday, March 08, 2007
எளிய முறையில் ஜாவா - பகுதி 3
மொழி கட்டமைப்பு:-
Black = SOA
Cyan = Component
Brown = OOPS
Yellow = Structured
Green = Procedural
Orange = Monolithic Concept
Blue = Assembly Language
Pink = Machine Language
சென்ற பகுதிகளில் ஜாவாவின் சிறப்புகளைப்பற்றிப்படித்தோம். இந்த பகுதியில் மொழியின் கட்டமைப்பைப்பற்றிக்காண்போம். மேலே உள்ள படம் புரோகிராமிங் லாங்க்வேஜின் கட்டமைப்பை எடுத்துரைக்கிறது.
இ-பிஸினஸ் (எலெக்ட்ரானிக் வணிகம்) -காக வடிவமைக்கப்பட்டது தான் ஜாவா. வணிக இணையத்தை உருவாக்குவதற்காக “சிம்பிள் ஆப்ஜெக்ட் ஆக்ஸஸ்” கட்டமைவை ஜாவாவில் எழுதமுடியும். “காம்போனன்ட்” கட்டமைவு என்பது அதற்குள் இருக்கும் சப்-ஆர்க்கிடெக்சர் கும். ஆப்ஜெக்ட் ஓரியண்டட் அமைவு காம்போனண்ட் தயாரிக்க உதவுகிறது. இது போல் ஒவ்வொரு லேயராக பிரிக்க பிரிக்க உட்பொருள் (core) கிடைக்கும்.
தெளிவாக விளக்கவேண்டுமாயின், எடுத்துக்காட்டிற்கு ஒரு வீட்டைக்கட்டவேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள். வீடு என்பது பல அறைகள் (லேயர்) கொண்டது. அறைகள் கதவு, ஜன்னல், சுவர், கூரை என்ற காம்போனன்ட்களால் ஆனது. சுவரை உருவாக்க செங்கல், சிமெண்ட், காங்கிரீட், பெயிண்ட் முதலானவை தேவை(ஆப்ஜெக்ட்). இவற்றை சரியான விகிதத்தில் கலப்பது எப்படி? அடுத்தடுத்து எந்தெந்த பொருள்களை எவ்விதத்தில் அடுக்கி உருவாக்கவேண்டும் என்பதற்கான வரைமுறையே புரோசிஜீரல், ஸ்ட்ரக்சர் லேயர் ஆகும்.
மோனோலித்திக், அசெம்ப்ளி, மெசின் கோட் என்பது அதனினும் உள்ளார்ந்த மொழி மாற்றங்கள் மட்டுமே!
அதாவது ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு தேசிய மொழி இருக்கும். அதேபோல வட்டார மொழி இருக்கும். அதற்குள் பேச்சு வழக்கு என்ற ஒன்றும் உண்டு. இவற்றுக்கும்மேலாக எளிதான பாஷை செய்கை! இதுபோல மோனோலித்திக் ஒரு குறிப்பிட்ட இன்டர்ப்ரெட்டர் (interpreter - என்பது பயனாளர் மொழியை கணினி மொழியாக மாற்ற உதவும் மொழிமாற்றி) மட்டும் புரிந்து கொள்ளக்கூடிய பாஷை. அசெம்ப்ளி யை புரோசசர்கள் (processor) புரிந்துக்கொள்ளும். மெசின் கோட் என்பது 0 அல்லது 1ல் எழுதப்பட்ட மொழியாகும்.
கம்யூட்டரால் பிட்களை(0,1) மட்டுமே புரிந்துக்கொள்ள முடியும். மிகப்பெரிய கோடிங்கை அவ்வாறு எழுதுவது மிகவும் கடினம். எனவே, பயனாளர்களால் எளிதாக கையாளக்கூடிய வகையில் மொழி அமைவது இன்றியமையாதது. ஒவ்வொரு லேயரும் அதனினும் மேம்படுத்தப்பட்ட ஒரு கட்டமைவை உருவாக்க உதவியிருக்கிறது என்பது உள்ளார்ந்த உண்மை. (இந்தியா இப்படி இருக்கிறதா?)
சரி.. கட்டமைவினைப்பார்த்தாயிற்று. அத்தகைய மொழி மாற்றத்தை ஜாவாவில் செய்வது யார்?
ஜாவா டெவலப்மண்ட் கிட்:-
javac - ஜாவா கம்ப்பைலர் ஜாவா புரோகிராமை பைட் கோடாக மாற்றும்.
java - ஜாவா இன்டர்பெரட்டர் பைட் கோடை எந்திரமொழியாக மாற்றும்.
Javap -ஜாவா டிஸ்அசெம்ப்ளர் பைட் கோடை புரோகிராம் விளக்கியாக மாற்றும்.
Javah - ஹெட் •பைல்ஸ் புரொடியூசர்
Javadoc - ஜாவா டாக்குமெண்ட்டேசன் ஹெச்டிஎம்எல் -ஆக மாற்ற
Jdb -ஜாவா டீபக்கர் பிழைகளைக்கண்டறிய
appletviewer - ஜாவா அப்லெட் வீவர் அப்லெட் -ஐக் காணஉதவுகின்றன.
ஜாவா லைப்ரரி பைல்ஸ்:-
ஜாவா கீவோர்ட்ஸ்:-
Wednesday, January 31, 2007
எளிய முறையில் ஜாவா - பகுதி 1 & 2
எளிய முறையில் ஜாவா - பகுதி1
ஜாவாவின் வரலாறு:-
1995ம் ஆண்டில் பிறந்த ஜாவாவின் கதை மிக சுவாரசியமானது.
பேட் ரிக் நாக்ட்டன், ஜேம்ஸ் கோஸ்லிங் என்னும் சன் மைக்ரோ சிஸ்டத்தின் இரு பொறியியலார்களும் பயனாளர்களுக்காக மேசை கணினிக்கான மொழியை வடிவமைத்துக்கொண்டிருந்தார்கள். அத்தகைய மொழி தொலைக்காட்சி செயலாக்கி (டிவி ரிமோட்டிலும்) யில் பயன்படுத்தவல்லதாக இருக்கும்படி அமைக்கவேண்டியிருந்ததால், சிறிய நினைவகத்தையும், மின்சாரத்தேக்கத்தையும் கருத்தில் கொள்ளவேண்டியிருந்தது. அதே சமயத்தில் வெவ்வேறு உற்பத்தியாளருடைய பொருட்களுக்கும் அது வளைந்துகொடுக்கக்கூடியதாக இருக்கவேண்டியாதாகவும் இருந்தது. அந்த புரோஜெக்ட்டுக்கு அவர்கள் 'க்ரீன்' (பச்சை) என்று பெயரிட்டிருந்தார்கள்.
நடுநிலையான, எந்த வகையான சிபியூ விற்கும் ஏற்புடைய, குறைந்த நினைவகத்தை ஆக்ரமிக்கும் இந்த புரோஜெக்ட் அவர்களுடைய தேவையை பூர்த்தி செய்யக்கூடியதாக இருந்தது. கோஸ்லிங் அதற்கு 'ஓக்' என்றே பெயரிட்டார். ஆனால் ஏற்கனவே அந்தப்பெயரில் வேறொரு மொழி இருந்ததால் பின்னாளில் காப்புரிமையைக்கருத்தில் கொண்டு 'ஜாவா' என்று மாற்ற வேண்டியதாயிற்று.
1992 ம் வெளியிடப்பட்ட 'பச்சை' '*7' என்றும் அழைக்கப்பட்டது. தொடர்பற்ற கட்டுப்படுத்தியாக (ரிமோட் கண்ட்ரோல்) இது சிறப்பாக செயல்பட்டது. இதனை கேபிள் டிவி பாக்ஸ் லும் ரிமோட் சாதனத்திலும் பயன்படுத்த முடியும் என்று நிரூபித்துக்காட்டினார்கள். இருப்பினும் இதனை வாங்கிக்கொள்ளவோ, விளம்பரப்படுத்தவோ எந்த நிறுவனமும் முன்வரவில்லை. எனவே பேட் ரிக் நாக்ட்டன் தாமே முயன்று கிட்டத்தட்ட 300,000 மைல்களுக்குச் சென்று மக்களிடம் இதன் சிறப்பைப்பற்றி எடுத்துரைத்தார். 1993 ல் மீண்டும் "·ப்ர்ஸ்ட் பர்சன்"என்ற பெயர் மாற்றத்தோடு மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
1994ல் நெட்ஸ்கேப் -ன் அறிமுகத்திற்குப்பிறகு "ப்ர்ஸ்ட் பர்சன்" முடிவுக்கு வந்தது. ஏனெனில் அந்த சமயத்தில் தான் இணையதளம் மக்களிடையே நன்கு புழங்கலாயிற்று. எனவே கிளையன்ட்-சர்வர் ஆர்க்கிடெக்சருக்கேற்ற சிறந்த பிரவுசரையும் அதற்குரிய துணைக்கருவிகளையும் சார்ந்த ஒரு மென்பொருள் தேவை என்பதை பேட் ரிக் நாக்ட்டன் -ம், ஜானாதன் பேனே -ம் உணர்ந்தார்கள். அதன்படி 1995 ல் 'ஹாட் ஜாவா' பிரவுசரையும் அறிமுகப்படுத்தினார்கள். இது ஜாவா மொழியிலே எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாவாவின் சக்தி இணையத்தைத்துவக்கி, இணையத்தில் ஊடுறுவி, இணையத்தை நிர்வகித்து, இணையத்தைக் கட்டுப்படுத்துவது என்று எல்லாவிதத்திலும் இன்று வரை ஒரு ஆளுமையான மொழியாகவே திகழ்கிறது.
இப்படிப்பட்ட மொழியின் தொழிட்நுட்ப சிறப்புக்கள் என்னென்ன என்பதை தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கிறதா? அவை அடுத்த பகுதியில் ...
(ஆர்வலர்கள் ஜாவா டெவலப்பர் கிட் டை www.java.sun.com ல் இலவசமாக பதிவிறக்கிக்கொள்ளலாம்)
எளிய முறையில் ஜாவா - பகுதி 2
ஜாவாவின் சிறப்புகள்:-
1. ஆப்ஜக்ட் ஓரியண்டட் புரோகிராம் (பொருள் சார்ந்த வரைமுறை)
2. இன்ஹெரிட்டன்ஸ் (பரம்பரை குணாதிசயம்)
3. பாலிமார்ப்பிசம் (பன்முக அமைவு)
4. டைனமிக் பைண்டிங் (நேரடி இணைவு)
5. மெசேஜ் கம்யூனிக்கேசன் (செய்தித்தொடர்பு)
1. பொருள் சார்ந்த வரைமுறை:-
ஜாவாவில் ஒவ்வொரு பகுதி/வகுப்பு(க்ளாஸ்) ல் உள்ள ஒவ்வொன்றும் ஒரு பொருளாகக்(ஆப்ஜெக்ட்) கையாளப்படுகிறது. அதாவது நாம் தினசரி வாழ்க்கையில் கையாளும் பொருள்களைப்போல..
எ.டு
உலகம் என்பது வகுப்பானால் அதில் உள்ள அனைத்தும் ஒவ்வொரு பொருளாகும். அவற்றில் நடக்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் செய்கைகள் ஆகும்.
எனவே கையாளப்படும் ஒவ்வொன்றும் ஒரு பொருளாகவும்(ஆப்ஜெக்ட்), செய்யப்படும் செயல் செய்கை(மெத்தட்)யாகவும் கையாளப்படுகிறது. எனவே பொருளினையும், செயலினையும் தனித்தனியாக வரையறுக்கவும் வேண்டிய போது வேண்டிய பொருளினை வேண்டிய செயல்களுக்காக பயன்படுத்தவும் முடிகிறது. சரி... இதனால் என்ன லாபம்? இருக்கிறது. ஜாவா ஒரு கட்டுப்பாடுள்ள கம்யூனிசவாதி என்று சொல்லலாம். அதாவது நாம் நமக்குத்தேவையான ஒரு வகுப்பை நிர்ணயிக்கும்போது அதற்கு என்ன பொருள்கள் வேண்டும், அதில் என்னென்ன செயல்கள் செய்யப்படவேண்டும் என்பதை நாமே நிர்ணயிக்கலாம். அதே போல் அதே வகுப்பையும், பொருள்களையும், செயல்களையும் தேவைப்படின் வேறு ஒருவரும் கையாள முடியும். இதனால் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஒரு அமைப்பு மீண்டும் மீண்டும் பயன்படுத்த ஏதுவாகிறது. இதைத்தான் 'ரீ யூசபிலிட்டி' என்கிறார்கள்.
2. பரம்பரை குணாதிசயம்
அது என்ன பரம்பரை குணாதிசயம்?
என்ன தான் ஜாவா புதுமைவாதியாக இருந்தாலும் பண்பில் பழமைவாதி தாங்க..
எப்படினு கேட்கிறீங்களா? ஜாவா - கிட்ட உனக்கு காதல் திருமணம் பிடிக்குமா? பெற்றோர் பார்க்கும் திருமணம் பிடிக்குமா? என்றால் முன்னுரிமை அளிப்பது 2வது வாய்ப்பிற்குத்தாங்க..
இதில் என்ன லாபம்? இருக்கிறதே! நம்மில் பலர் ரிஸ்க் எடுக்கவிரும்பாதவர்கள்; நாமே பெண் பார்த்து, நாமே அவளைப்புரிந்துகொண்டு, அவளை நம்வழிக்குக்கொண்டுவருவது....ச்ச! அட இதெல்லாம் எதுக்குங்க..
அவங்களே பார்த்துவைப்பாங்க...அவ நம்வழியிலே இருந்தால் நம்ம பாரம்பரியம், பழக்கவழக்கமெல்லாம் அவளே அறிந்துவைத்திருப்பாள்; அதனால் நம்மை அவள் எளிமையாகப்புரிந்துக்கொண்டு இணக்கமாக இருப்பாள்; நம் பெற்றோர்களே பார்ப்பதால் அவர்களுக்கிடையேயான கருத்து வேறுபாடுகளும் வருவது குறைவு என்பது நமது புத்திசாலி வாழைப்பழ சோம்பேறிகளின் எண்ணம். நம் ஜாவாவும் அந்த ரகம் தாங்க. ஏற்கனவே தயாரிக்கப்பட்ட இருவேறு பொருள்களை ஒரு அமைப்பில் இணைத்து வைத்து அதன் குணங்களை எளிமையாக எடுத்துக்கொள்வதும், தேவைப்படின் அதில் புதுமையைச்சேர்ப்பதும் ஜாவாவில் செய்யக்கூடிய பரம்பரை குணாதிசயம் ஆகும்.
சிங்கிள் இன்ஹெரிட்டன்ஸ்:-
அப்பா/அம்மாவின் முகச்சாயல் பிள்ளைக்கு வருவது
மல்டி லெவல் இன்ஹெரிட்டன்ஸ்:-
அதாவது தாத்தாவின் மூக்கும், பாட்டியின் நிறமும், அப்பாவின் சாயலும் பேரனுக்கு இருப்பதோடு அவனது சொந்த குணங்களும் வெளிப்படுவது.
3. பன்முக அமைவு:-
இது இன்னும் சுவாரசியமானது.
அதாவது நம்ம 'ஜீன்ஸ்' பிரசாந்த்-ஐஸ்வர்யாராய், 'வரலாறு' அஜீத், 'பார்த்திபன் கனவு' சினேகா மாதிரிங்க.. ஒரே ஆள் பல கெட்டப் ல வர்றதுக்கு பேரு பன்முக அமைவு.. இதனால் என்ன லாபம்?
ரொம்ப ஈஸி, கெட்டப் மட்டும் மாத்தினால் போதும். கால்ஷீட்/சம்பளம் ஒன்று தான்.(பயன்பாட்டில் ஒருமுறை வரையறுத்தால் போதும்). இங்கே செய்கைகளும் (மெத்தட்) அப்படித்தான், கெட்டப் மாதிரி தகவல்கள்கள்(இன்·பர்மேஷன்) மட்டும்
மாறும். இதனால் பன்முகபயனும், மீள்பயனும் (ரீயூசபிலிட்டி) கிடைக்கிறது.
மீள்பயன் நேரத்தையும், கணினி நினைவகத்தையும் சேமிக்கிறது.
4. நேரடி இணைவு (டைனமிக் பைண்டிங்):-
பொதுவாக ஸ்டேட்டிக் பைண்டிங் தான் நடைமுறையில் உள்ளது.
பைண்டிங் என்பது நாம் எழுதும் வரைமுறையையும், கணினியில் உள்ள கோப்புக்களையும் இணைப்பதாகும். இதற்காக லிங்க்கர்(linker) என்ற புரோகிராமை எழுதிவைத்திருக்கிறார்கள். இந்த லிங்க்கர் தான் நமது எழுத்தாணையையும் கணினியின் செயல்பாட்டையும் இணைக்கிறது. வெவ்வேறு வகுப்பிலுள்ள வெவ்வேறு செய்கையை இயக்க 'நிலையானப்பிணைவு'(ஸ்டேட்டிக் பைண்டிங்) ஏற்றது. ஏனெனில் ஒருமுறை நினைவகத்தில் ஏற்றப்பட்டவுடன் அது அந்த பயன்பாடு முடியும்வரை நிலையாக இருக்கும். ஆனால் 'வெவ்வேறு வகுப்பிலுள்ள ஒரே செய்கையை' இதனால் ஒரே சமயத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் முதலில் ஏற்றுக்கொள்ளும் செய்கையை மட்டுமே நினைவில் வைத்திருக்கும்.
எ.டு.
நீங்கள் ரயில்நிலையத்தில் முன்பதிவு செய்யப்போகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். 30ம் தேதிக்கு மதுரை பாண்டியன் எக்ஸ்பிரசுக்கும், 7ம் தேதி கல்கத்தா ஹவுரா எக்ஸ்பிரசுக்கும் பதிவு செய்யவேண்டும் என்றால்,
உங்களது செய்கை(மெத்தட்) பதிவு செய்வது(ஒரே செய்கை); ஆனால் வகுப்புகள்(க்ளாஸ்) வெவ்வேறு (மதுரை, கல்கத்தா). ஸ்டேட்டிக் பைண்டிங் -ல் ஒரே சமயத்தில் இருவேறு வகுப்புகளுக்கு ஒரே செய்கையைக்கையாள முடியாது.
ஆனால் டைனமிக் பைண்டிங் -ல் இது சாத்தியம். ஏனெனில் 'நேரடி இணைவு' நேரடியாக நினைவகத்தைச் சுட்டுவதோடு(பாயிண்டிங்), பயன்பாட்டின் இயக்க
நேரத்தில்(ரன் டைம்) மட்டுமே செயல்படுகிறது. இதனால் செயல் முடிந்தவுடன் அதன் இயக்கம் துண்டிக்கப்பட்டு அதே பெயரிலுள்ள அடுத்த செய்கைக்கு வழிவிடுகிறது.
5. செய்தித்தொடர்பு:-
இதுவரை வகுப்பு(க்ளாஸ்), பொருள்(ஆப்ஜெக்ட்), செய்கை(மெத்தட்) உங்களுக்குப்புரிந்திருக்கும். வகுப்பின் அங்கம்தான் பொருளும், செய்கையும். அவற்றுள் அடங்குவது செய்தியும், தகவலும். செய்தியையும்(மெசேஜ்), தகவலையும்(டேட்டா) இணைப்பது செய்தித்தொடர்பு(கம்யூனிக்கேஷன்) ஆகும்.
'சிறார்கள் கொல்லப்பட்டார்கள்' என்பது செய்தி.
'நொய்டா', '70' என்பது தகவல்.
"நொய்டாவில் 70 சிறார்கள் கொல்லப்பட்டார்கள்" என்று இரண்டையும் இணைப்பது செய்தித்தொடர்பு.
வெறும் செய்தியோ, வெறும் தகவலோ முழுமையான பொருளைத்தராது. செய்தித்தொடர்பு அதை நிறைவுச்செய்கிறது.

Monday, April 10, 2006
குழந்தைகள் தினம்...
குழந்தைகள் தினம்...
நேருஜி பிறந்த நவம்பர் 14 - குழந்தைகள் தினம்...
காலையில் பள்ளி எப்போதைய நாளை விடவும் களை கட்டியது.
வகுப்பறையில் அலமாரி முழுவதும் பொம்மைகளாக நிறைந்திருந்தன. ரெட், புளூ, பிங்க், கிரீன், யெள்ளோ ஹவுஸ் குழுக்களின் அடிப்படையில் ஒவ்வொருக்கும் ஒவ்வொரு வேலையாக பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதலில் வகுப்பறையிலுள்ள டெஸ்க், பெஞ்ச் அனைத்தும் ஒரு குழு அப்புறப்படுத்தியது. இன்னொரு குழு நீரூற்றி வகுப்பறையை சுத்தம் செய்தது.
அலங்கரிப்பதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டது. கொண்டுவந்த பொம்மைகள், வகுப்பறை ஆவணங்கள், கோப்புகளை பாதுகாக்கவும், வேறு வகுப்புப் பிள்ளைகள் எங்கள் வகுப்பில் நடப்பதை அறியாவண்ணம் பாதுகாக்கவும் இன்னொரு குழு நியமிக்கப்பட்டது.
கரும்பலகையில் கலைமகளின் ஓவியத்தை ஒருத்தி வரைய, ரோஜா இதழ்களால் வாசலில் நேருவின் உருவப்படத்தை இன்னொருவர் வரைய பெஞ்ச் மீது பெஞ்ச் போட்டு சாட், கலர் பேப்பர் ஒட்ட என்று ஆளுக்கொருவராக வேலைகளை எங்கள் குழுவில் ஆரம்பித்தோம்.
வகுப்பிலுள்ள அனைவரது பொம்மைகளுமாக சேர்ந்து ஒரு சிறிய குன்று போல பொம்மைகள் இருந்தன. யாருடைய பொம்மைகள் யாருடையவை என்பதைக் கண்காணிப்புக்குழுக்கள் பெயர், எண்ணிக்கையுடன் ஒரு பட்டியல் தயார் செய்து வைத்திருந்தனர். இதனால் எங்களுக்கு அவைகளைப் பிரிப்பதும் மீண்டும் அவர்களுக்கு திருப்பிக்கொடுக்கவும் வசதியாக இருந்தது.
கொண்டுவரப்பட்ட பொம்மைகளில் ஒரே ரகமாக இருந்த பொம்மைகளை எல்லாம் தனித்தனியாக நான் பிரித்தெடுத்தேன். அதாவது, வாகன பொம்மைகளை எல்லாம் தனியாக, கடவுள் உருவ பொம்மைகள் தனியாக, விலங்குகள், செடிகள், மீன்கள் போன்ற பொம்மைகள் தனியாக என்று வகைப்படுத்தினேன். மீதி பொம்மைகள் பெஞ்ச், டெஸ்க்குகளை அடுக்கிவைத்து நவராத்திரி கொழு போல பொம்மைகள் வரிசையாக படிகளில் அடுக்கிவைக்கப்பட்டன.
மஞ்சு, சொன்னபடி களிமண்ணும், பிள்ளையார் பொம்மையும் கொண்டுவந்திருந்தாள்; அதை மலையாக்கி மலையில் பிள்ளையாரை அமர வைத்து படிகள் செய்து அடிவாரத்தில் ஆறு அமைத்து ஆர்க்கிடெக்சர் பொம்மைகளால் அணை செய்து சுற்றிலும் செடிகள் வைத்து நிரப்பினோம். மயில், மான், புறா ஆங்காங்கே நிற்பது போல, பறவைகள் பறப்பது போல அவற்றில் அழகாக பொருத்தி வைத்தோம்.
அணையின் அடியில் தண்ணீர் நிரப்பி களிமண்ணால் கரைகள் கட்டி பல வண்ண பிளாஸ்டிக் மீன்களை அதில் விட்டு கரையில் ஒரு மீனவ பொம்மையைக் கையில் தூண்டிலோடு அமரவைத்தோம். சின்ன சின்ன பூக்களால் ஒட்டவைத்து பச்சைவண்ணத்தாளை மெல்லியதாக நறுக்கி புல்வெளி அமைத்து அவற்றில் நிஜக் கொடிகளைப் படரவிட்டோம்.
அதனருகே வரிசையாக செல்லும் ரயில்பெட்டிகளை அடுக்கி கீ கொடுத்தால் ஓடும் தண்டவாளத்தின் மீது அமைத்து ரயில் நிலையமும், பஸ் பொம்மைகளைக்கொண்டு பேருந்து நிலையமும் அமைக்கப்பட்டது. அட்டைப்பெட்டிகளாலும் செங்கற்கல்லாலும் அடுக்கிவைத்து காவல் நிலையத்தின் முன்புறத்தை மட்டும் உருவாக்கி இருந்தோம். சாக்பீஸால் வட்டம் போட்டு அதனுள் விமான பொம்மைகளை நிற்கவைத்து விமான நிலையமும் தயார் ஆனது.
மற்றொரு புறம் ஸ்கூட்டர், கார், லாரி பொம்மைகளை வரிசையாக அடுக்கி ஒரு சிலவற்றை மட்டும் ரோடில் செல்வதுபோல சாக்பீஸால் ஆன ரோட்டில் நிறுத்தினோம். ஆங்காங்கே டிராபிக் சிக்னல் ஸ்டேண்டுகளையும் ஸ்கேலின் உதவியால் நிற்கவிட்டோம்.
மலைப்படிகள் காய்ந்ததும் புனிதா அவளது அகல் விளக்குகளை ஏற்றிவைத்தாள். மற்ற கடவுள் சிலைகளைக்கும் ஆங்காங்கே தெர்மோகோலில் செய்த கோபுரத்தின் வாசலில் கோலங்கள் இட்டாள். ஊதிபத்தியும், மலர் மாலைகளும் கொண்டு ஷீலா அலங்கரித்தாள்.
பெண்கள், குழந்தைகள் போன்ற ஆளுருவ பொம்மைகளையும் கோயில் பிரகாரத்தில் ஆங்காங்கே ஜீடி நிற்க வைத்தாள்.
அலமாரியில் புத்தகங்கள் ஒருபுறம் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டு திடீர் நூலகமாக மாறியது. பிளாஸ்டிக் காய்கறிகள், பழங்களை ஒரு கூடையில் அடுக்கி வைத்து இன்னொருபுறம் 'திடீர் சந்தை' முளைத்தது. சுவரின் ஒருபுறத்தில் தேசியத் தலைவர்கள் படமும், மற்றொரு புறம் பாடநூல், உலக வரைபடங்கள், இன்னொரு புறம் நாங்கள் வரைந்துவந்த படங்களையெல்லாம் வரிசயாக மாட்டினோம். அங்கங்கு தெரிந்த மீதி சுவர் பாகங்களையும் கலர் ஜரிகைத்தாள்களால் அலங்கரித்தோம். வகுப்பின் நடுவில் கண்ணாடிவிளக்கு மாட்டப்பட்டது. நுழைவு வாயில் சுவர்கள் பூங்கொத்துகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வாசலிலும் மலர்க்கோலங்கள், கலர்ப்பொடிகளால் ரெங்கோலி போடப்பட்டது.
இந்திய வரைபடத்தை நடுவில் வரைந்து தேசிய ஒற்றுமையைக் குறிக்கும்வண்ணம் ஒவ்வொரு மாநிலத்தின் நடுவிலும் அந்தந்த கலாச்சார முறைப்படி ஆடையணிந்த மாணவிகளை நிற்கவைத்தோம். கொழுப்படியின் அடியில் டேப் ரிக்கார்டர் மங்கல இசைத்தட்டோடு தயாராக வைக்கப்பட்டிருந்தது. இவையனைத்தும் மற்ற வகுப்புகளுக்கு துளியும் சென்று சேராவண்ணம் மிக கவனமான பாதுகாப்புடன் திரையிட்டு நடந்தேறியது. அவர்களும் அவரவர் வகுப்புகளை அலங்கரிப்பதில் மும்முரமாக இருந்தனர். இடையில் வரும் சில ஒற்றர்களை எங்களது கண்காணிப்புக்குழுவினர் எச்சரித்து உள்ளேவிடாமல் திருப்பி அனுப்பிவைத்தனர்.
பிற்பகலின் முதல்மணியில் தேர்வுக்குழுவினர் எங்களது வகுப்பை மதிப்பீடு செய்ய வந்தார்கள். இந்தக்குழு அவரவர் வகுப்பாசிரியரைத்தவிர மற்ற 5 நபர்களால் அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு வகுப்பையும் பார்வையிட்டு ம்திப்பெண்கள் வழங்கவேண்டும். இவ்வாறாக 10 குழுக்கள் பார்வையிட்டு மதிப்பிட்டு பள்ளித்தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. பிறகு தலைமை ஆசிரியரும், சிறப்பு விருந்தினரும் பார்வையாளருமான மாவட்ட ஆட்சித்தலைவரும் ஒவ்வொரு வகுப்பாக பார்வையிட்டனர்.
எங்கள் வகுப்பு முதல் தளத்தில் முதல் வகுப்பாக இருந்தது. எனவே மாணவிகள் சீருடையில் கீழ்த்தளத்திலிருந்து வரிசையாக நின்று வரவேற்பளித்தனர். சாரணியர் முறைப்படி அவருக்கு சல்யூட் அடித்து எங்கள் லீடர் வகுப்பிற்குள் அவர்களை வரவேற்றாள். நறுமணப்புகை, மங்கல இசை, விளக்கொளி என்று எங்கள் வகுப்பே எங்களுக்கு அன்று புதுமையாகக் காட்சி அளித்தது. தலைமை ஆசிரியர் எங்களது அலங்காரங்களை மிகவும் வியந்து பாராட்டினார். ஒவ்வொன்றாக தொட்டுப்பார்த்து ரசித்தார். நிஜப்பூக்களை பிளாஸ்டிக் பூக்களா என்றும், பிளாஸ்டிக் புற்களைப்பார்த்து "இந்தப்புற்களையெல்லாம் எங்கே பறித்து வந்தீர்கள்?" என்றும் கேட்டு எங்களை பரவசப்படுத்தினார். மாவட்ட ஆட்சியாளர் ஒரு 'மாதிரி நகரம்' உருவாக்கியதையும், கொடுக்கப்பட்ட குறுகிய நேரத்தில் இத்தனைச் சிறப்பாக செய்த எங்களது குழு ஒற்றுமையையும் பாராட்டிவிட்டு அடுத்த வகுப்பிற்குச் சென்றார்கள்.
எங்கள் வகுப்பிற்கு என்ன மதிப்பெண் வழங்கியிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளும் வேளை வராததாலும், எங்களது தனி நபர்த் திறமையை வெளிப்படுத்தும் போட்டிக்கு செல்லவேண்டியிருந்ததாலும் நாங்கள் வகுப்பறையை பூட்டி விட்டு மைதானத்திற்குச் சென்றோம்.
ஜீடி மாலை நடக்கவிருக்கும் பரதநாட்டிய வரவேற்பின் ஒத்திகைக்குக்கிளம்பினாள். புனிதா ஓட்டப்பந்தயந்திற்கும், ஷீலா கயிறுதாண்டுதலில் கலந்துகொண்டாள். நான் ஓவியப்போட்டிக்கும், திருக்குறள் போட்டிக்கும் பெயர்க்கொடுத்திருந்தேன். மாலை அரேபிக்&வெஸ்ட்டர்ன் டேன்ஸிலும் கலந்திருந்தேன். இவ்வாறாக நாங்கள் தனித்தனியாக கலைந்தாலும் மீண்டும் மாலை 6 மணிக்கு ஆடிட்டோரியத்தில் ஒன்று கூடினோம். தனிநபர் போட்டி முடிவுகள் போட்டி முடிந்தவுடனேயே அறிவிக்கப்பட்டு பரிசுக்குரியவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது. எனவே தனிநபர் போட்டியில் யார் யார் பரிசு பெற்றவர்கள் என்பது நாங்கள் சந்தித்துக்கொண்ட போதே தெரிந்துவிட்டது. எங்களுக்கோ அனைத்து வகுப்புகளுக்குமான போட்டியின் வின்னர் யார் என்பதை அறிந்துக்கொள்ளும் ஆவலே மேலிட்டது. கலைநிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக முடிந்தபின் பரிசு அறிவிப்பு.
எங்களது பி.இ.டி ஆசிரியை தனது வெண்கலக்(பித்தளை?) குரலில் முடிவை அறிவித்தார். "தி ·ப்ர்ஸ்ட் ப்ரைஸ் ஆ·ப் குரூப் யுனிட்டி கோஸ் டூ.... எங்களுக்கு திக், திக்.... "தி ·ப்ர்ஸ்ட் ப்ரைஸ் ஆ·ப் குரூப் யுனிட்டி கோஸ் டூ.... சிக்ஸ்த் ஸ்டேன்டர்ட் ஏ செக்ஷன்.. சிஸ்டர் திரேசா ப்ளீஸ் கம்" என்று எங்களது வகுப்பாசிரியை அழைத்த போது ஆரவாரமும், கைத்தட்டலுமாய் சந்தோசத்தில் குதித்தோம். பள்ளி முழுவதும் கரகோஷம் ததும்ப மாவட்ட ஆட்சியாளரிடமிருந்து 'மெமோரல் ஸ்டேண்ட்' -ஐ எங்கள் வகுப்பாசிரியை வாங்கிய தருணம் அற்புதமானது. மைக்கிலேயே அவர் "தேங்க்யூ மை டியர் ஸ்டூடன்ஸ்" என்று சொல்லிவிட்டு பரிசைத் தலைமை ஆசிரியரிடம் அளித்தார். நான் பள்ளியை விட்டு வரும்வரை அந்த மெமோரியல் ஸ்டேண்ட் தலைமை ஆசிரியரின் அலுவலகத்தை அலங்கரித்தது.
விழா முடிந்ததும் எங்கள் ஆசிரியை பிறகு மேடையிலிருந்து இறங்கி வந்து எங்களிடம் அளவளாவினார். மற்ற ஆசிரியைகளும் எங்கள் வகுப்பிற்கே முதல் மதிப்பெண் அளித்திருந்ததாகவும், அனைவரின் ஏக மன பாராட்டினை வழங்கித்தந்தமை தனக்கு மறக்க முடியாத அனுபவம் என்றும் கூறினார். நாங்கள் ரஜினிக்கு எங்களது பாராட்டினைக் கைகுலுக்கித் தெரிவித்துக்கொண்டோம். ஏனைனில் கண்ணாடி விளக்குகள், ஜரிகை அலங்காரப்பொருட்கள், வண்ண மீன்கள்.... என்று பல விலையுயர்ந்த பொருட்களைத் தனது ஸ்டோரிலிருந்து ரிஸ்க் எடுத்து கொண்டுவந்தவளாயிற்றே! அவளோ எங்களிடம் "நீங்கள் தானடி காரணம். இந்தப்பொருட்களெல்லாம் எங்கள் கடையில் சும்மா இருந்த போது இல்லாத அழகு... இங்கே நீங்கள் வரிசையாக அடுக்கி பொருத்தமாக அலங்கரித்தபோது தானே வந்தது" என்றாள்.
அன்றைய 'குழந்தைகள் தினம்' எங்கள் ஒவ்வொருவர் வாழ்நாளிலும் மீண்டும் வர இயலாத பாலக தினம்.

Wednesday, January 18, 2006
கண்ணாடியல்ல, பனித்துளி
ஒளிவாங்கும் ஓர் ஒளியைக் கண்டேன்
என் உளியதுவோ என்றே
முன் நின்றேன்
பார்த்தால் பார்த்து
சிரித்தால் சிரித்து
அழுதால் அழுதது
ரசக் கண்ணாடி!
முன்னாடி நின்று
பிம்பத்தை உள்வாங்கி
பின்
அனல்மூச்சாய் வெளிவிட்டுத்
தேடினேன்... தேடினேன்
காணவில்லை...
கைத்தளம் பற்றும்முன்னே
கரைந்தது
அது
கண்ணாடியல்ல, பனித்துளி.
என் உளியதுவோ என்றே
முன் நின்றேன்
பார்த்தால் பார்த்து
சிரித்தால் சிரித்து
அழுதால் அழுதது
ரசக் கண்ணாடி!
முன்னாடி நின்று
பிம்பத்தை உள்வாங்கி
பின்
அனல்மூச்சாய் வெளிவிட்டுத்
தேடினேன்... தேடினேன்
காணவில்லை...
கைத்தளம் பற்றும்முன்னே
கரைந்தது
அது
கண்ணாடியல்ல, பனித்துளி.
Subscribe to:
Posts (Atom)