"மிஸ்டர் வின்ஸ் எப்படி இருக்கீங்க? என்னை தெரிகிறதா? "
"நீங்க…. நீ …. ரமேஷ் தானே…நல்லா இருக்கியாடா…. இங்கே எப்படி?"
"போன மாதம் தான் மாற்றல் வாங்கிக்கொண்டு இந்த ஊருக்கு வந்தேன்..வீட்டில் எல்லோரும் நலமா…? "
"எல்லாரும் நல்லா இருக்காங்க… இப்போ எங்கே தங்கி இருக்கே?"
"சொல்றேன். வா வீட்டுக்கு போலாம். "
வீட்டில் இருவரும் தேனீர் அருந்தியபடி…"ஏன்டா ரமேஷ், சொந்த வீட்டையும் ஊரையும் விட்டுட்டு ஏன் வந்தே? "
"என் கம்பெனி ல பாஸ் மாறிட்டஙடா…. அவன் இம்சை தாங்க முடியல. சீனியர், ஜூனியர் எல்லரையும் நீ, வா, போங்ஙறான். அவன் வீட்டு வேலைக்காரன் மாதிரி நடத்தறான். எனக்கு சரி படும்னு தோணல… அதான் இந்த ப்ராஞ்ச் கு கேட்டுட்டு வந்திட்டேன்…"
"அப்பா…அப்பா… இந்த பொம்மையை புடி… நீயும் வாப்பா விளையாடலாம். "
" நான் பேசிட்டு இருக்கேன்ல… போய் தம்பியோட விளையாடு."
"முடியாது…நீயும் வா… அங்கிள் நீங்களும் வாங்க…"
"சொன்னா கேட்க மாட்டே… தொந்திரவு பண்ணாதே! போ!" தள்ளி விட்டான்.
“ம்..ம்….ம்… “ குழந்தை அழ ஆரம்பித்தது.
வின்ஸ் “அழாதேம்மா…! அப்பா தானே திட்டினார்”
"நான் அதுக்கொன்னும் அழல…அப்பா என்ன போ...னு சொல்லிட்டாரு… போ... மா....னு அன்பா சொல்லிருக்கலாம்ல! "
ரமேஷின் பின் மண்டையில் சொடேர் என அடித்தாற்போல இருந்தது.
குழந்தையை அள்ளித் தூக்கியபடி "சரிம்மா, இனி அப்பா கோபமா பேசமா ட்டேன்"
எதையும் எதிர்பார்க்காதது போல் குழந்தை கையிலிருந்து நழுவி விளையாட ஓடியது.
Saturday, July 11, 2009
Subscribe to:
Posts (Atom)