Wednesday, January 18, 2006

கண்ணாடியல்ல, பனித்துளி

ஒளிவாங்கும் ஓர் ஒளியைக் கண்டேன்
என் உளியதுவோ என்றே
முன் நின்றேன்
பார்த்தால் பார்த்து
சிரித்தால் சிரித்து
அழுதால் அழுதது
ரசக் கண்ணாடி!
முன்னாடி நின்று
பிம்பத்தை உள்வாங்கி
பின்
அனல்மூச்சாய் வெளிவிட்டுத்
தேடினேன்... தேடினேன்
காணவில்லை...
கைத்தளம் பற்றும்முன்னே
கரைந்தது
அது
கண்ணாடியல்ல, பனித்துளி.