Saturday, June 25, 2005

கடை

காலையில்
நகை, புடவை
பெண் பார்த்தாள்!
மாலையில்
பெண் பார்க்கப்பட்டது!

சிநேகிதியே!

நீயும் நானும்
அன்று யாரோ!

பள்ளியில் இருவரும்
சண்டை போடும்வரை

வேறு வேறு பிரிவில்
இருந்த நாம்
ஒரே வகுப்பில் இணையும்வரை

யாருக்கும் தராத
என் பேனா
உன் தாளில் எழுதும் வரை

என் எச்சில் உணவை
நீ உண்ணும் வரை

உன் உடையை
நான் உடுத்தும் வரை

என் இணையைப்பற்றி நீயும்
உன் இணையைப்பற்றி நானும்
விவாதிக்கும் வரை

சிநேகிதியே......

இன்று
நீ இல்லத்தரசி!

நீயும் நானும்
யாரோ!